TNLA.014

TNLA.014

Tamil Nadu promise ledger
TNLA.014·24 Aug 2026·legislature

The Chief Minister announced the 'Vetri Payanam' scheme under Rule 110, expanding free bus travel for women to Deluxe, Express, and Mofussil buses from October 2.சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ் டீலக்ஸ், எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்படும் 'வெற்றிப் பயணம்' திட்டத்தை முதலமைச்சர் அறிவித்தார்.

On August 24, 2026, the Chief Minister announced the 'Vetri Payanam' scheme in the Assembly under Rule 110, expanding free bus travel for women and transpersons from October 2, 2026 to include Deluxe, Express, LSS, and Mofussil ordinary buses without distance caps or income limits, incurring an annual expenditure of ₹6,000 crore.24.08.2026 அன்று சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர், 'வெற்றித் தமிழகம்' தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் 'வெற்றிப் பயணம்' என்ற பெயரில் மகளிர் மற்றும் திருநங்கைகளுக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணத்தை காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) முதல் டீலக்ஸ், எக்ஸ்பிரஸ், LSS மற்றும் புறநகர் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தி அறிவித்தார். இதற்கு ஆண்டுக்கு ₹6,000 கோடி செலவிடப்படும்.
Content built by: AI Translated
Press Release Content
TNLA.PR.No: 14 Date: 24.08.2026 Announcement by the Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru S. Joseph Vijay in the Tamil Nadu Legislative Assembly under Rule 110 Regarding the 'Vetri Payanam' Scheme as part of the 'Vetri Thamizhagam' Vision Plan Hon'ble Speaker, Women's travel freedom is foundational to their economic emancipation and family advancement. Under the existing free travel scheme, travel is restricted to ordinary town buses up to 40 km, excluding Express, LSS, Deluxe, and Mofussil buses. The government has decided to launch the expanded 'Vetri Payanam' scheme on October 2, Mahatma Gandhi's birth anniversary. Key Highlights: 1. Women can travel free of charge not only in ordinary town buses, but also in Express, LSS, and Deluxe government buses operating in urban and corporation areas. 2. In inter-district and mofussil ordinary buses, as well as hilly terrains, women can travel free of charge. 3. Transgender persons can also avail of free travel under this scheme. 4. No income ceiling or journey count restrictions will apply. This initiative will cost the state exchequer approximately Rs. 6,000 crore annually. •••••••• Issued By: - DIPR, Secretariat, Chennai – 9த. நா.ச.பே. எண்: 14 நாள்: 24.08.2026 "வெற்றித் தமிழகம்" தொலைநோக்குத் திட்டத்தின் ஓர் அங்கமாக, 'வெற்றிப் பயணம்' திட்டம் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு. மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மகளிரின் பயணச் சுதந்திரம், அவர்களின் பொருளாதாரச் சுதந்திரத்திற்கும் குடும்பங்களின் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக இருக்கிறது. தற்போது செயல்படுத்தப்பட்டுவரும் மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தில் மாநகரம், நகர்ப்புறங்களில் சாதாரண மற்றும் மலைப்பகுதிப் பேருந்துகளில் 40 கி.மீ. வரை மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, முதல் கட்டமாக: மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி Express, LSS, டீலக்ஸ் (Deluxe) அரசுப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளலாம். மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் (Mofussil) மற்றும் மலைப்பகுதிகளில், சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளலாம். இத்திட்டத்தில் பயன்பெற, வருமான உச்சவரம்போ அல்லது பயண எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகள் இல்லை. இத்திட்டத்தின்கீழ் திருநங்கையரும் (Transgender) கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளலாம். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் ஆண்டுதோறும் தோராயமாக 6000 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும். •••••••• வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
Issued By: Tamil Nadu Legislative Assembly Secretariat / DIPR