Registration Department allocated additional appointment tokens for Avani Avittam and Pournami on August 27, 2026.ஆவணி அவிட்டம் மற்றும் பௌர்ணமி தினமான ஆகஸ்ட் 27 அன்று சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
On August 25, 2026, the Inspector General of Registration ordered an increase in registration appointment tokens across Sub-Registrar offices for August 27, 2026 (Avani Avittam & Pournami), enhancing standard tokens from 100 to 150 for single-registrar offices and 200 to 300 for dual-registrar offices.25.08.2026 அன்று பதிவுத்துறை தலைவர் வெளியிட்ட அறிவிப்பில், ஆவணி அவிட்டம் மற்றும் பௌர்ணமி தினமான 27.08.2026 அன்று பத்திரப்பதிவு செய்ய ஏதுவாக ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 150 வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 300 வில்லைகளும், 100 அதிபதிவு அலுவலகங்களுக்கு தட்கல் வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் வில்லைகளும் ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
Press Release No : 577 Date: 25.08.2026
PRESS RELEASE
Allocation of Additional Registration Tokens Across All Sub-Registrar Offices in View of Public Demand for Avani Avittam and Pournami
To facilitate increased property registrations on auspicious days, the Registration Department has ordered the allocation of additional booking tokens on 27.08.2026 (Avani Avittam and Pournami).
For Sub-Registrar offices with one Sub-Registrar, token capacity is increased from 100 to 150; for offices with two Sub-Registrars, capacity is increased from 200 to 300; and for 100 high-volume registration offices, standard tokens are increased to 150 along with 4 additional Tatkal tokens in addition to the existing 12 Tatkal tokens.
Inspector General of Registration
**************
Issued By: - DIPR, Secretariat, Chennai – 9செய்தி வெளியீடு எண்: 577 நாள்: 25.08.2026
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் ஆவணி அவிட்டம் மற்றும் பௌர்ணமி தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு
சுப முகூர்த்த மற்றும் விசேஷ தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அந்நாட்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தற்போது ஆவணி மாதத்தில் வரும் ஆவணி அவிட்டம் மற்றும் பௌர்ணமி தினமான 27.08.2026 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
எனவே, ஆவணி மாதத்தில் ஆவணி அவிட்டம் மற்றும் பௌர்ணமி தினமான 27.08.2026 அன்று ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
பதிவுத்துறைத் தலைவர்
**************
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
Issued By:Directorate of Information and Public Relations (DIPR), Chennai