582

582

Tamil Nadu promise ledger
582·26 Aug 2026·election

Chief Election Commissioner Gyanesh Kumar to chair Regional Conference on 'ELC & ECINET' in Chennai on August 27.தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார் தலைமையில் ‘தேர்தல் விழிப்புணர்வு மன்றங்கள் (ELC) மற்றும் ECINET’ மண்டல மாநாடு சென்னையில் ஆகஸ்ட் 27 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

On August 26, 2026, the Election Department announced that Chief Election Commissioner Thiru Gyanesh Kumar will visit Chennai on August 27, 2026 to lead a regional conference on 'Electoral Literacy Clubs (ELC) & ECINET' at Kalaivanar Arangam and interact directly with 500 Booth Level Officers (BLOs) and 1,000 student delegates.26.08.2026 அன்று தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிவிப்பில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார் ஆகஸ்ட் 27 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் ELC மற்றும் ECINET மண்டல மாநாட்டிற்குத் தலைமை தாங்கி, 500 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் 1,000 மாணவப் பிரதிநிதிகளுடன் நேரடியாகக் கலந்துரையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Linked District(s)
Content built by: Original (AI Extracted)
Press Release Content
Press Release No : 582 Date: 26.08.2026 PRESS RELEASE Chief Election Commissioner Thiru. Gyanesh Kumar to Address Students and Interact with BLOs at Regional Conference in Chennai The Chief Election Commissioner Thiru. Gyanesh Kumar will visit Chennai on Thursday (August 27, 2026) to lead a regional conference on “Electoral Literacy Clubs (ELC) & ECINET” and hold a direct interactive session with Booth Level Officers (BLOs) at Kalaivanar Arangam. Organised by the Election Commission of India in coordination with the Chief Electoral Officer (CEO), Tamil Nadu, under the theme “Learn Democracy, Lead Democracy”, the initiative aims to strengthen voter outreach, foster constitutional literacy among future voters, and harness digital platforms for electoral operations. A high-level ECI delegation will participate, including Deputy Election Commissioner Thiru Bhanu Prakash Yeturu, Director General (Media) Thiru Ashish Goyal, and Director General (IT) Tmt. Seema Khanna. The conference will host nearly 1,000 delegates representing 300 schools, 75 colleges, and 25 universities across Tamil Nadu (~900 delegates) and Puducherry (~100 delegates). In the morning session, the CEC will review grassroots roll verification with 500 BLOs; in the afternoon, he will deliver the keynote address to students, followed by live demonstrations of voter registration and ECINet tools. CHIEF ELECTORAL OFFICER AND PRINCIPAL SECRETARY TO GOVERNMENT. Issued By: - DIPR, Secretariat, Chennai – 9செய்தி வெளியீடு எண்: 582 நாள்: 26.08.2026 செய்தி வெளியீடு சென்னையில் நடைபெறும் மண்டல மாநாட்டில், தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார் மாணவர்களிடையே உரையாற்றவும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் (BLOs) கலந்துரையாடவும் உள்ளார்: தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார், வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27, 2026) சென்னைக்கு வருகை தந்து, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ள "தேர்தல் விழிப்புணர்வு மன்றங்கள் (ELC) மற்றும் ECINET" குறித்த மண்டல மாநாட்டிற்குத் தலைமை தாங்கி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் (BLOs) நேரடிக் கலந்துரையாடல் நடத்தவுள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் (CEO) ஒருங்கிணைந்து "ஜனநாயகத்தைக் கற்போம், ஜனநாயகத்தை வழிநடத்துவோம்" ("Learn Democracy, Lead Democracy") என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்படும் இந்த முன்னெடுப்பானது, வாக்காளர் விழிப்புணர்வை வலுப்படுத்துதல், வருங்கால வாக்காளர்களிடையே அரசியலமைப்பு விழிப்புணர்வை வளர்த்தல் மற்றும் தேர்தல் பணிகளுக்கு டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாள் முழுவதும் நடைபெறும் இந்நிகழ்வில் துணைத் தேர்தல் ஆணையர் திரு. பானு பிரகாஷ் எத்துரு, தலைமை இயக்குநர் (ஊடகம்) திரு. ஆஷிஷ் கோயல் மற்றும் தலைமை இயக்குநர் (தகவல் தொழில்நுட்பம்) திருமதி. சீமா கண்ணா உள்ளிட்ட இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழுவினர் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 300 பள்ளிகள், 75 கல்லூரிகள் மற்றும் 25 பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட சுமார் 1,000 பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
Issued By: Office of the Chief Electoral Officer, Tamil Nadu / DIPR