602

602

Tamil Nadu promise ledger
602·29 Aug 2026·governance

Water Resources Department ordered water release from Amaravathi Dam for drinking water schemes in Tiruppur and Karur districts.திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவைகளுக்காக அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டது.

On August 29, 2026, the Water Resources Department ordered the discharge of water at 1,000 cusecs per day from Amaravathi Dam through its river sluice for 8 days from 30.08.2026 to 07.09.2026 (extendable by 4 days based on storage) to replenish drinking water schemes in Tiruppur and Karur districts affected by deficit rainfall.29.08.2026 அன்று எல்-நினோ தாக்கத்தால் மழைப்பொழிவு குறைந்த நிலையில், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய அமராவதி அணையிலிருந்து 30.08.2026 முதல் 07.09.2026 வரை நாளொன்றுக்கு 1000 கன அடி வீதம் 8 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
Linked District(s)
Content built by: AI Translated
Press Release Content
Press Release No : 602 Date: 29.08.2026 PRESS RELEASE In accordance with the orders of the Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru S. Joseph Vijay, in view of deficit rainfall caused by El Nino conditions, to recharge groundwater for drinking water schemes implemented along the Amaravathi River and fulfill drinking water needs in Tiruppur and Karur districts, the Government of Tamil Nadu has ordered water release from Amaravathi Dam via river sluices at 1,000 cusecs per day for 8 days from 30.08.2026 to 07.09.2026, and depending on storage and inflows, for an additional 4 days if needed. Secretary to Government Issued By: - DIPR, Secretariat, Chennai – 9செய்தி வெளியீடு எண்: 602 நாள்: 29.08.2026 செய்தி வெளியீடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க, தற்போது, எல்.நினோ பாதிப்பினால் மழைப் பொழிவு இல்லாததால் அமராவதி ஆற்றில் செயல்படுத்தப்படும் குடிநீர்த் திட்டங்களுக்கு போதுமான நிலத்தடி நீர் உயர்வதற்கும், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட பொதுமக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்கும், திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையின் ஆற்று மதகு வழியாக 30.08.2026 முதல் 07.09.2026 வரை, நாளொன்றுக்கு, வினாடிக்கு 1000 கன அடி வீதம் 8 நாட்களுக்கும், போதிய மழைப்பொழிவு காரணமாக வரும் நாட்களில் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில், மேலும் 4 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 1000 கன அடி வீதம், அமராவதி அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து, அமராவதி அணையிலிருந்து, நீர் திறந்து விட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. அரசு செயலாளர் வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
Issued By: Directorate of Information and Public Relations (DIPR), Chennai