603

603

Tamil Nadu promise ledger
603·30 Aug 2026·governance

The Chief Minister announced CMPRF relief of ₹3 lakh each for 4 deceased children and ₹1 lakh for an injured woman in the Dindigul road accident.திண்டுக்கல் மாவட்டம் கொல்லப்பட்டி சாலை விபத்தில் உயிரிழந்த 4 குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ₹3 லட்சமும், காயமடைந்தவருக்கு ₹1 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.

On August 30, 2026, the Chief Minister expressed deep condolences over a tragic road accident in Kollapatti village, Vedasandur taluk, Dindigul district where a vehicle hit bystanders, causing the death of 4 young children and injuring an elderly woman. Relief of ₹3 lakh each to the bereaved parents and ₹1 lakh to the injured was sanctioned from the CMPRF.30.08.2026 அன்று திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், கொல்லப்பட்டி கிராமத்தில் சாலையில் எதிர்பாராதவிதமாக வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த நான்கு குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தலா ₹3 லட்சமும், படுகாயமடைந்த பெண்ணிற்கு ₹1 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டார்.
Linked District(s)
Content built by: AI Translated
Press Release Content
Press Release No : 603 Date: 30.08.2026 PRESS RELEASE Condolence and Financial Assistance to the Families of Deceased and Injured Persons in a Road Accident on Kollapatti-Puthur Road, Vedasandur Taluk, Dindigul District Announcement by the Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru S. Joseph Vijay In an unexpected vehicular accident today (30.08.2026) in Kollapatti village, Vedasandur taluk, Dindigul district, when a Mahindra Dost vehicle collided with bystanders on the roadside, Tmt. Anjalaiammal (aged 60) of Puthur village and four children—Yogavarshini (aged 11), Ananya (aged 6), Dhanusri (aged 7), and Poshkiran (aged 6)—sustained grievous injuries and were admitted to Dindigul Government Medical College Hospital. Tragically, all four children succumbed to their injuries. I convey my deepest condolences and sympathies to the parents and relatives of the deceased children. I have ordered special medical care for Tmt. Anjalaiammal and sanctioned financial relief from the Chief Minister's Public Relief Fund of Rs. 3,00,000/- each to the families of the deceased children and Rs. 1,00,000/- to the injured undergoing treatment. ************* Issued By: - DIPR, Secretariat, Chennai – 9செய்தி வெளியீடு எண்: 603 நாள்: 30.08.2026 செய்தி வெளியீடு திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், கொல்லப்பட்டி-புத்தூர் சாலையில் நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், கொல்லப்பட்டி கிராமத்தில் இன்று (30.08.2026) சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்த புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி அஞ்சலையம்மாள் (வயது 60), அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் யோகவர்ஷினி (வயது 11), அனன்யா (வயது 6), தனுஸ்ரீ (வயது 7) மற்றும் போஷ்கிரண் (வயது 6) ஆகியோர் மீது வாகனம் மோதிய விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி நான்கு குழந்தைகளும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் திருமதி அஞ்சலையம்மாள் அவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். ************* வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
Issued By: Directorate of Information and Public Relations (DIPR), Chennai